அமை‌ச்ச‌ர் பத‌வி‌‌‌‌ல் இரு‌ந்து பூங்கோதையை ‌நீ‌க்க ஆளுநரிடம் மனு: சுப்பிரமணியன் சுவாமி!

செவ்வாய், 13 மே 2008 (09:59 IST)
நடத்தை விதிகளுக்கு மாறாகச் செயல்பட்ட அமைச்சர் பூங்கோதையை பத‌வி‌‌ல் இரு‌ந்து நீக்கக் கோரி ஆளுநரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு கொடு‌த்து‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், மின்வாரியத்தில் பணிபுரியும் தனது உறவினரான ஜவஹரை லஞ்சப் புகாரில் இருந்து காப்பாற்ற லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் உபாத்யாயாவுடன் இரண்டு முறை தொலைபேசியில் அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை பேசியுள்ளார்.

முதல்முறை தொடர்பு கொண்ட போது, தனது உறவினரை அடையாளப்படுத்திக் கொண்டு அவர் மீதுள்ள புகார் குறித்துக் கூறியுள்ளார். இதுகுறித்த விசாரணை நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்காமல் துறை ரீதியான விசாரணை நடவடிக்கைக்கு மாற்ற முடியுமா எனவும் கேட்டுள்ளார்.

மீண்டும் ஒரு முறை தனது உதவியாளர் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை பூ‌ங்கோதை தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் பேசிய உபாத்யாயா, "லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை மின்வாரியத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். துறையின் தலைமை பொறியாளர் அல்லது வேறொரு உய‌ர் அதிகாரி இந்த வழக்கில் தனது நிலையைத் தெரிவித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார்.

இதற்கு அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை நன்றி சொல்கிறார். அத்துடன் உரையாடல் நிறைவடைகிறது.

லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள தனது உறவினரைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் பேசி நடத்தை விதிகளை மீறியுள்ளார் அமைச்சர் பூங்கோதை. அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்