பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த 5 மாணவ, மாணவிகள் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 84.4 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். எஞ்சிய 15.6 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள காடாநல்லூரை சேர்ந்த கவுதமன் என்ற மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவனும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யா என்ற மாணவியும், திருப்பூரைச் சேர்ந்த ரூபினி என்ற மாணவியும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கீதா என்ற மாணவியும் தற்கொலை செய்துள்ளனர்.