இலவசங்கள் எப்போதும் வறுமையை நீக்காது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

Mahendran

வெள்ளி, 14 மார்ச் 2025 (13:04 IST)
அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இலவச அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே தேர்தலில் ஜெயிக்க முடியும் என்ற நிலையை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், "இலவசங்கள் எப்போதும் வறுமையை நீக்காது" என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அவர் பேசிய போது, "வேலைவாய்ப்புகளே இந்தியாவில் வறுமையை நீக்கும். எந்த நாடும் இலவச கொடுப்பினைகள் மூலம் வறுமையை ஜெயிக்கவில்லை என்பதை இந்தியாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
 
தொழில் முனைவோருக்கு தொழில்களை உருவாக்கி தர வேண்டும். நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை ஒவ்வொரு மாதமும் உருவாக்கி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இதை மட்டும் அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் தொடர்ந்து செய்தால் வறுமை மறைந்து விடும் என்றும் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 
ஆனால், அரசியல்வாதிகள் இதை பின்பற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத் தேர்தலின் போதும், பாராளுமன்ற தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை அள்ளி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்