மருத்துவ படி‌ப்பு‌க்கு ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பம்!

சனி, 10 மே 2008 (10:36 IST)
மருத்துவ‌ம் மற்றும் பல் மருத்துவ படி‌ப்பு‌க்கான ‌வி‌‌ண்ண‌ப்ப‌ம் ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. தரவ‌ரிசை பட்டியல் ூலை 1‌ஆ‌ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) மரு‌த்துவ‌ர் டி.பி.கலாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2008-09ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவ பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் ூன் 3ஆ‌ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பம் பெற கடைசி நாள் ூன் 17ஆ‌ம் தேதி பிற்பகல் 3 மணி ஆகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ூன் 17ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவ‌ரிசை பட்டியல் ூலை 1ஆ‌ம் தேதி வெளியிடப்படும். மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் ூலை 8ஆ‌ம் தேதி தொடங்கி, 16ஆ‌ம் தேதி வரை நடைபெறும்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மருத்துவ தேர்வுக்குழு அரங்கில் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த கவுன்சிலிங் மூலம் 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 251 இடங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் நிரப்பப்படும். மேலும் 85 பி.டி.எஸ். இடங்கள் சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியிலும், 765 சீட்டுகள் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளிலும் நிரப்பப்படும் எ‌ன்று மரு‌த்துவ‌க் க‌ல்‌வி இய‌க்குன‌ர் கலா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்