வியாழன், 8 மே 2008 (12:25 IST)
திருச்சி மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. கடும் வெப்பத்தால் அவதிபட்ட மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது.
திருச்சியில் அதிகபட்சமாக 96.5 மி.மீ மழையும், திருச்சி விமான நிலையத்தில் 53.8 மி.மீ மழையும், அப்பர் அணைக்கட்டில் 32 மி.மீ மழையும், குளித்தலையில் 20 மி.மீ மழையும் பெய்துள்ளது.
இந்த கனமழையால் சென்னை-திருச்சி ஏர் டெக்கான் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பி வந்தது.