3 மா‌நில‌ங்க‌ளி‌ல் தமிழக பேரு‌ந்துகளை இயக்க ஒப்பந்தம்: நேரு!

செவ்வாய், 6 மே 2008 (10:49 IST)
கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆ‌கிய மாநிலங்களில் தமிழக அரசு பேரு‌ந்துகளை இய‌க்க‌ ஒ‌ப்ப‌ந்த‌ம் மேற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌‌ன்று அமை‌ச்ச‌ர் நேரு விளக்கம் அளித்தார்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் விதி 111-ன் கீழ் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாசித்தளித்த திருத்த அறிக்கை‌யி‌ல், 22.10.07 அன்று போக்குவரத்துத் துறை பற்றிய துணைக் கேள்வி ஒன்றுக்கு விடையளித்து இருந்தேன். அதில், போக்குவரத்து ஒப்பந்தங்களின்படி கர்நாடகா மாநிலத்தில் 50,000 ‌கி.மீ நீளம் வரைக்கும் நாம் பேரு‌ந்துகளை ஓட்டலாம்.

கேரளா மாநிலத்தில் 5,000 கி.‌மீ வரை ஓட்டலாம் என்றும், தமிழகத்தில் புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் 150 பேரு‌ந்துக‌ள் ஓட்டினால், நாம் புதுச்சேரியில் 400 பேரு‌ந்துகள் ஓட்டலாம் என்றும் ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்த திருத்த அறிக்கையை அளிக்கிறேன். கர்நாடகாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம், கர்நாடகா பகுதிகளில் 53 ஆயிரத்து 113 கிலோ மீட்டரும், கேரள பகுதியில் 5 ஆயிரத்து 31 கிலோ மீட்டரும் பஸ்கள் ஓட்டலாம்.

புதுச்சேரியில் 90 பேரு‌ந்துக‌ள் இருமுனை வரியில் இருந்து ஒருமுனை வரியாக மாற்றியும், 75 புதிய பேரு‌ந்துகளையும் இயக்கவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இனி வரும் காலங்களில் தமிழகம்-புதுச்சேரி தடத்தில் 3:1 என்ற விகிதத்திலும், தமிழகம்-காரைக்கால் வழித்தடத்தில் 1:1 என்ற விகிதத்தில் பேரு‌ந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் நேரு கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்