ப‌லியான குழ‌ந்தைக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.3 ல‌ட்ச‌ம் உத‌வி: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:55 IST)
''திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு உ‌யி‌ரிழ‌ந்த 4 குழந்தைக‌ளி‌னகுடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி சட்டபேரைவில் தெரிவித்தார்.

தமிழக சட்ட‌ப்பேரவையில் இ‌ன்றகவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி உறுப்பினர்கள் கவன குறைவு காரணமாக உயிர் இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன.

இதனையடுத்து பேசிய முதல்வர் கருணாநிதி, தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு ஒவ்வாமையால் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்