பொறியியல் படி‌ப்பு‌க்கு மே 10ஆ‌ம் தேதி விண்ணப்ப‌ம்: பொன்முடி!

புதன், 23 ஏப்ரல் 2008 (15:19 IST)
பொ‌றி‌யிய‌ல் படி‌ப்‌பி‌ற்கான ‌வி‌ண்ண‌ப்ப‌‌ங்க‌ள் மே 10ஆ‌ம் தே‌தி முத‌ல் அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் ‌வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌ம் என‌்று உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளித்த பே‌ட்டி‌யி‌ல், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் செ‌ன்னை அ‌ண்ணா ப‌‌ல்கலை‌க்கழக‌‌த்‌தி‌ல் மே 10ஆ‌ம் தே‌தி முத‌ல் மே 26ஆ‌ம் தே‌தி வரை விநியோகம் செய்யப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கப்படும் இடம் ஆகியவற்றுக்காக இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இந்த விண்ணப்பங்களை சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய அண்ணா பல்கலைக்கழகங்கள் அரசு மற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலை ம‌ற்று‌ம் அறிவியல் கல்லூரிகளில் பெறலாம். அண்ணா பலகலைக்கழகத்தில் தபால் மூலமும் பெறலாம். இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை பூ‌ர்‌த்‌தி செ‌ய்து மே 26ஆ‌மதேதி மாலை 5.30 மணிக்குள் கொடுக்க வேண்டும்.

தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யின வகு‌ப்‌பினரு‌க்கு ரூ.250‌ம், பொது பிரிவுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப்படும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கட‌ந்த ஆ‌‌‌ண்டை போலவே மாணவ‌ர்க‌ள், அவரது பெற்றோருக்கு பேரு‌ந்து கட்டண சலுகை அளிக்கப்படும்.

இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுவதால் கூடுதல் இடம் கிடைக்கும். பிளஸ்2 தேர்வு முடிவு வந்த பிறகு கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்