யா‌ர் உ‌ண்மையான ம.தி.மு.க: 21ஆ‌ம் தே‌தி தேர்தல் ஆணைய‌ம் இறு‌தி விசாரணை!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (10:03 IST)
ம.தி.மு.க. அங்கீகார விவகாரம் குறித்தஇறுதிக் கட்ட விசாரணையஏ‌ப்ர‌ல் 21ஆ‌மதேதிக்கு தே‌ர்த‌லஆணைய‌மத‌ள்‌ளி ை‌த்து‌ள்ளது.

க‌ட்‌சி‌ததலைமையுட‌னஏ‌ற்‌ப‌ட்தோதலதொட‌ர்‌ந்தம.தி.மு.க நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளஎல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆ‌கியோ‌ரதனித்து செயல்பட்டு வருகிறார்கள். இவ‌‌ர்க‌ளஇருவரும் தங்கள் தலைமையிலான ம.தி.மு.க.வைத்தான் உண்மையான ம.தி.மு.க.வாக அங்கீகரிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணைய‌த்‌திட‌மவிண்ணப்பித்தும் உள்ளனர்.

இதேபோ‌லதனது தலைமையிலான ம.தி.மு.க.தான் உண்மையானது என்று கூ‌றி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுக்களை வீடியோ ஆதாரங்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வைகேதாக்கல் செய்தார்.

நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க தலைவர் வைகோ, நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள், தலைமைத் தேர்தல் ஆணைய‌ரகோபாலசாமி, தேர்தல் ஆணையாளர்கள் நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் முன்பாக நேரில் ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.

அப்போது செஞ்சி ராமச்சந்திரன் சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ரதனஞ்செயன் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மேலும் 4 வார கால அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையர்களிடம் கோரினார்.

இதற்கு வைகோ தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி ராமச்சந்திரன் வழ‌க்க‌றிஞ‌ரவிடுத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், இறுதிக்கட்ட விசாரணையை ஏ‌ப்ர‌ல் 21ஆ‌மதேதிக்கு ஒத்தி வைத்தது. அன்று போட்டி ம.தி.மு.க. தலைவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்