கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 172 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!
சட்டப் பேரவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைய ஓசூர் வட்டம், விசுவநாதபுரம் கிராமத்தில் 172.19 ஏக்கல் நிலம் எல்காட் நிறுவனத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென எல்காட் நிறுவனத்தால் மத்திய அரசிடம் உரிய விண்ணப்பம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க எல்காட் நிறுவனத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை, சேலம், நெல்லையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திருச்சி, மதுரை ஆகிய நரங்களிலும் த.தொ. பூங்காக்கள் அமைய விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரையைப் பொறுத்தவரையில் சில வாரங்களில் த.தொ. பூங்கா தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று கூறினார்.