மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னையில் மயானங்களில் உடல் தகனம் மற்றும் புதைப்பதற்கு கட்டணங்கள் கைவிடப்படும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்தது.
மயிலாப்பூரில் உள்ள சுடுகாட்டில் மேயர் மா.சுப்பிரமணியன் இதற்கான அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் 38 சுடுகாடு, இடுகாடுகள் இருக்கின்றது. உடல்களை எரிக்கவும், புதைக்கவும் ரூ.250 முதல் ரூ.600 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் அந்த கட்டணம் கைவிடப்படுகிறது.
தற்போது சென்னையில் 11 மயானங்களில் கியாஸ் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மயானங்களிலும் விரைவில் கியாஸ் வசதி செய்யப்படும். அதன் பிறகு விறகு மூலம் உடல்கள் எரிப்பது முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று சுப்பிரமணியம் கூறினார்.