கோயம்பேடு மார்க்கெட்டில் கடையடைப்பு!

திங்கள், 7 ஏப்ரல் 2008 (10:39 IST)
ஒகேன‌க்‌க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌‌‌நிறைவே‌ற்ற‌க் கோ‌ரி செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று மாலை முத‌ல் நாளை மாலை 6 வரை கடையடை‌ப்பு போரா‌ட்ட‌‌ம் நடைபெறு‌கிறது.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை தாக்குதல் நடத்தியும், தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களையும் அடித்து நொறுக்கியும் வரும் கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வே‌ண்டு‌ம்.

மத்திய- மாநில அரசுகள் விரைவாக செயல்பட வலியுறுத்தி கோயம்பேடு காய், கனி, மலர் வளாகம் நாளை (8ஆ‌ம் தே‌தி) அ‌ன்று 24 மணிநேரம் கடையடைப்பு செய்வது அனைத்து வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே இன்று மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை கடையடைப்பு நடைபெறும். எனவே வியாபாரிகள் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு தந்து கடை அடைப்பு முழு வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எ‌ன்று சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் அங்காடி வியாபாரிகள் செயல் கமிட்டி தலைவர் டி.ராஜசேகரன், எஸ்.சீனிவாசன், பொருளாளர் கே.தேவராஜ் ஆகியோர் கூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்