க‌ர்நாடகா‌வி‌ல் தமிழர்க‌ளி‌ன் நல‌ன் கா‌க்க மத்திய அரசு மு‌ன்வர வே‌ண்டு‌ம்: ச‌ட்ட‌ப் பேரவையி‌ல் தீர்மானம்!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (15:40 IST)
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை காத்திடும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிற காரணத்தால் க‌ர்நாடகா‌வி‌ல் உ‌ள்ள தமிழக மக்கள் நலனை, உரிமையை காத்திட உடனடியாக முன்வர வேண்டும் எ‌ன்று த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரமமுடிந்ததுமஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டத்திற்கஎதிராகன்னஅமைப்பினரநடத்திவன்முறைகளகுறித்தசிறப்பகவஈர்ப்பதீர்மானமவிவாதத்திற்கஎடுத்துககொள்ளப்பட்டது. இதிலபங்கேற்றஅனைத்தகட்சி உறுப்பினர்களபே‌சின‌ர்.

அ‌த‌ன் பிறகு முதலமைச்சர் கருணாநிதி தீர்மானத்தின் மீது பேசியதாவது: நமக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள சில மொழி வெறியர்களுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பு கூட ஒரு வேளையில் வரவேற்கத்தக்க கசப்பாக உள்ளது. ஏனெனில் இந்த தீர்மானத்தை எல்லாரும் முன்மொழிந்து வழிமொழிந்து கொண்டு வரவழி வகுக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் என்றாலே சில மொழி வெறியர்களுக்கு அறவே பிடிப்பது இல்லை. நம்மை வெறுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது தீர்க்கப்படாத வரை இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது வாய்மொழியாகத்தான் இருக்கும்.

ஒகேனக்கல் பிரச்சினையை க‌ர்நாடக‌ம் த‌ற்போது கையில் எடுத்துள்ளனர். இதற்காக கடந்த 27ஆ‌ம் தேதி சட்ட‌ப் பேரவை‌யி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌‌த்‌தி‌ல், தமிழ்நாடு எப்போதுமே தனது அண்டை மாநிலங்களுடன் நட்புறவையும் அந்த மாநில மக்களுடன் நல்ல உறவையும் பேணி வளர்த்து வருகிறது.

எனவே ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முழு ஒத்துழைப்பை தர வேண்டும். கர்நாடகத்தின் இந்த எதிர்ப்பு போக்கை தடுத்து நிறுத்திட இந்த சட்ட‌ப் பேரவை மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானத்தின் முடிவுரையாக இருந்தது.

அதோடு இன்னும் சில வார்த்தைகளை சேர்த்து தீர்மானம் கொண்டு வருகிறோம். அமைதி காணும் நோக்குடனும், மாநிலங்களிடையே ஒற்றுமைகளை வேண்டி இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இதற்கு எதிராக கர்நாடக மொழி வெறியர்கள் சிலர் தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் போக்கை, கலவரத்தில் ஈடுபட்டுள்ளதை இந்த ச‌ட்ட‌ப் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை காத்திடும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிற காரணத்தால் தமிழக மக்கள் நலனை, உரிமையை காத்திட உடனடியாக முன்வர வேண்டும். இதை வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை சட்ட பேரவை‌யி‌ல் ஒரு மனதாக நிறைவேற்றி தந்ததற்காக நன்றி தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன். இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து அணி வகுப்பது பற்றி, பணி முடிப்பது பற்றி அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

இ‌தை‌த் தொட‌ர்‌ந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்