‌விவசா‌யிகளு‌க்கு கூடுத‌ல் ‌நிவாரண‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

செவ்வாய், 25 மார்ச் 2008 (09:58 IST)
''மழையா‌ல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் கருணாநிதி விரைவில் வெளியிடுவார்'' என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

திருநெல்வேலியில் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் செய்தியாளர்களுக்கு ‌அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் சுமார் 12,000 ஹெக்டே‌ர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய, மாநில, கிராமப்புறச் சாலைகள் என மொத்தம் 331 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

117 வீடுகள் முழுமையாகவும், 219 வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதமடைந்துள்ளன. 2 பே‌ர் உயரிழந்துள்ளனர். ஒரு மாடு, ஒரு கன்று, 11 ஆடுகள் ஆகியவை உயிர் இழந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு கூடுதல் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இதுதொடர்பாக கோட்டையில் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே, கூடுதல் நிவாரணம் வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று அமை‌ச்‌ச‌ர் ‌மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்