திம்பம் மலையில் வரலாறு காணாத மழை! திடீரென தோன்றிய அருவி!

திங்கள், 24 மார்ச் 2008 (11:45 IST)
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் நே‌ற்றபெ‌ய்வரலாறு காணாத மழையா‌ல் கடும் மூடுபனியும், திடீரென அருவிகளும் தோன்றியுள்ளது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இது கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்டதாகும். இங்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்தது. நேற‌றசனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. சுமார் ஐந்து மணி நேரம் விடமால் பெய்த கன மழையால் குற்றாலம்போல் வனப்பகுதியில் திடீர் அருவி தோன்றியது.

நே‌ற்றகாலையில் இருந்தே கடுமையான மூடுபனி இருந்ததால் வாகனங்கள் திம்பம் மலைப்பகுதியில் உள்ள இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளில் செல்வதற்கு கடும் திண்டாட்டம் ஏற்பட்டது. பல வாகனங்கள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. இது குறித்து இப்பகுதி மக்களிடம் கேட்டபோது கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு இதுபோல் மழை பெய்துள்ளதாக தெரிவித்தனர்.