சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி, தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 9 ஆயிரத்து 792 கோடியே 30 லட்சம் ஆகும்.
சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த தமிழக அரசின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை:
2008-2009 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.51,505.62 கோடி எனவும், ஏற்படக்கூடிய வருவாய் செலவினங்கள் ரூ.51,421.57 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், நிகரக் கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளிட்ட அரசின் மூலதனச்செலவு ரூ. 9,876.35 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.9,792.30 கோடி அளவிற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்.
இது 2003 ஆம் ஆண்டு தமிழக நிதிநிலைப் பொறுப்புடமைச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை குறியீட்டை விட, அதாவது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தை விட, குறைவாகவே உள்ளது என்பதை குறிப்பிட வேண்டுகிறேன்.
பொதுக் கணக்கின் நிகரத்தோடு எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்தப் பற்றாக்குறை ரூ.2.19 கோடியாக இருக்கும். செலவினங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தும் வரிவசூலை மேம்படுத்தியும் இந்தப் பற்றாக்குறை ஈடுகட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை (கோடி ரூபாயில்)
மொத்த வருவாய் வரவுகள் ரூ.51,505.62 வருவாய் செலவினங்கள் (-) ரூ.51,421.57 அரசின் மூலதனச்செலவு (-) ரூ. 9,876.35