தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் அன்பழகன் 2008-09ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு இன்று காலை வந்த போது, சட்டபேரவை அ.இ.அ.தி.மு.க. துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து அரசுக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். பின்னர் அவையை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப் பேரவை வெளி நடப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. தற்போது தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக தொழிற்சாலைகள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது.
எனவே சட்டம்- ஒழுங்கு சரியில்லாததை கண்டித்தும், விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், தமிழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கையை புறக்கணிப்பு செய்து அவையை விட்டு அ.இ.அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக கூறினர்.