சிறிலங்காப் படையின் இணைத் தளபதி ரத்திநாயக்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எல்.பெர்னாண்டோ, கடற்படையின் ரியர் அட்மிரல் தெனோனி, விமானப் படையின் பி.பி.பிரேமசந்திர உள்ளிட்ட 6 பேர் தமிழகத்தில் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு மத்திய அரசால் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் இந்தச் செயலைக் கண்டித்து கோவை லயன்ஸ் கிளப் அருகே இன்று மாலை 5.00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் கோவை கு.இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, திருப்பூர் துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கலையரசன், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் முகிலன், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தனசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
பின்னர், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய காரணத்தால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.