க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌‌யின‌ர் ஆயுத‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்: தா.பா‌ண்டி‌ய‌ன்!

செவ்வாய், 11 மார்ச் 2008 (10:25 IST)
சமூக விரோதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

திருவாரூ‌ரி‌ல் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌ சார்பில் நட‌ந்த கண்டனப் பொதுக் கூட்டம் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயலாள‌ர் தா. பாண்டியன் பேசுகை‌யி‌ல், குடியரசுத் தலைவரின் விருது பெற்று, சிறப்பாகப் பணியாற்றி வந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு துடிப்பான ஊராட்சிமன்றத் தலைவர், கள்ளச்சாராயக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ஜெயக்குமார் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் தகவல் தெரிவித்தும், அவர்கள் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் வேண்டுமானால் குற்றவாளிகள் தப்பி விடலாம். ஆனால், எங்களிடம் இருந்து தப்ப முடியாது.

இனி கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் வெளியில் செல்லும் போது 4 பேராகத்தான் செல்ல வேண்டும். உங்களது பாதுகாப்புக்கு 6 அங்குலத்துக்கு குறைவான நீளமுள்ள கத்தியை வைத்துக் கொள்ளுங்கள். மேலும் 3 அடி நீளமுள்ள குறுந்தடியை கையாளப் பழகிக் கொள்ளுங்கள். சாதாரண மக்களை காவல்துறை காக்க முடியாது என்றால், அது எங்களால் முடியும்.

நாட்டையும், மக்களையும் பாதுகாக்க கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பிரகடனம் (ஆயுதம் வைத்துக் கொள்ளுதல்) வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல், அது செயல்பாட்டுக்கும் கொண்டு வரப்படும் என்று தா. பாண்டியன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்