மா‌நில‌ங்களவை தே‌ர்த‌ல்: தமிழக தேர்தல் பார்வையாள‌ர் நரேஷ் குப்தா!

செவ்வாய், 11 மார்ச் 2008 (09:51 IST)
தமிழகத்தில் நடக்க இருக்கும் மா‌நில‌ங்களவை தேர்தலில், தேர்தல் பார்வையாளராக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருக்கும் மா‌நில‌ங்களவை தேர்தலுக்கான அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணைய‌ம் வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்தல் நடக்கும் மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து இந்திய தேர்தல் ஆணைய‌ம் ஆணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் 2ஆ‌ம் தேதி தேர்தல் நடக்க உள்ள இந்த தேர்தலுக்கான பார்வையாளராக நரேஷ்குப்தா செயல்படுவார். தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை, ஓட்டு போடும் நடவடிக்கை, ஓட்டு எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் அதற்கான விதிமுறையின் அடிப்படையில் நடத்தப்படுகிறதா? என்பதை நரேஷ்குப்தா கண்காணிப்பார் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்