இதையடுத்து தூத்துக்குடி கோட்டாட்சியர் கலைமணி, வட்டாட்சியர் வேலுசாமி, மீன்வளத்துறை இணை இயக்குனர் சுப்புராஜ், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கோரி ஆகியோர் அங்கு வந்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்
25 பேர் மீது வழக்கு!
தாக்குதல் தொடர்பாக மணப்பாடு ஊர்க் கமிட்டி துணைத் தலைவர் டொமினிக் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மணப்பாடு மீனவர் காலனி பிவிண்டன், குமார் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தாக்குதலில் பலியான மீனவர் அந்தோணிசாமியின் உடல் நேற்று இரவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை அவரது உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.