தனக்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த ஜோதிடரும் இல்லை என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஈரோட்டைச் சேர்ந்த ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்ற ஒரு நபர் குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடும் போது, "ஜெயலலிதாவின் ஜோதிடர்'' என்று குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். எனக்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த ஜோதிடரும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில், இது போன்ற உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.