ஆ‌சி‌ரியரை கா‌‌ப்பா‌ற்ற செ‌ன்ற காவலரை தா‌க்‌கியது கு‌ம்ப‌ல்!

வெள்ளி, 7 மார்ச் 2008 (12:02 IST)
விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் ஆ‌‌விபுதூ‌ரி‌ல் கட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌சி‌ரியரை கா‌‌ப்பா‌ற்ற செ‌ன்ற காவலரை கு‌ம்ப‌ல் தா‌க்‌கியது.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் ஆ‌விபுதூ‌‌ரி‌ல் உ‌ள்ள அரசு ப‌ள்‌‌ளி‌யி‌ல் ஆ‌சி‌ரியராக வேலை பா‌ர்‌த்து வருபவ‌ர் செ‌ல்ல‌ப்ப‌ா‌ண்டி (40). இவ‌ர் நே‌ற்று ப‌ள்‌ளி‌க்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது மூ‌ன்று பே‌ர் கொ‌ண்ட கு‌ம்ப‌ல் ஆ‌‌சி‌ரிய‌ர் செ‌ல்‌ல‌ப்பா‌ண்டியை கட‌த்‌‌தியது.

‌‌பி‌ன்ன‌ர் ஆ‌சி‌‌ரிய‌ர் செ‌ல்ல‌ப்பா‌ண்டி மனை‌வி அ‌மி‌ர்த‌த்தை ‌அ‌ந்த கு‌ம்ப‌ல் தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்‌ந்து கொ‌ண்டு ரூ.20 ல‌‌ட்ச‌ம் கே‌ட்டு ‌மிர‌ட்டியது.

இது கு‌றி‌த்து அ‌மி‌ர்த‌ம் காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் புகா‌ர் செ‌ய்தா‌ர். இதையடு‌த்து அ‌மி‌ர்‌த‌‌ம் மூல‌ம் அ‌ந்த கு‌ம்பலை ‌பிடி‌க்க காவ‌ல்துறை‌யின‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டன‌ர்.

அத‌ன்படி அ‌மி‌ர்த‌ம் ரூ.20 ல‌ட்ச‌ம் பண‌த்துட‌ன் அ‌ந்த கு‌ம்ப‌ல் இரு‌க்கு‌ம் இட‌த்து‌க்கு செ‌ன்றா‌ர். அ‌ப்போது மறை‌ந்‌திரு‌ந்த காவல‌ர்க‌ள் அ‌ந்த கு‌ம்பலை ‌பிடி‌க்க முய‌ன்றன‌ர். அ‌ப்போது நட‌ந்த ச‌ண்டை‌யி‌ல் காவல‌ர் ம‌ன்னா‌ங்க‌ட்டி, ஆ‌சி‌ரிய‌ர் செ‌ல்ல‌ப்பா‌ண்டி ஆ‌கியோ‌ர் படுகாய‌‌ம் அடை‌ந்தனர்.

இதையடு‌த்து காவல‌ர்க‌ள் து‌ப்பா‌‌க்‌கியா‌ல் சு‌ட்டின‌‌ர். இ‌தி‌ல் கட‌த்த‌ல் கு‌ம்ப‌லை சே‌ர்‌ந்த ரமே‌ஷ் படுகாய‌ம் அடை‌ந்தா‌ன். கு‌ம்பலை சே‌ர்‌ந்த ம‌ற்ற 2 பே‌ர் த‌ப்‌பி ஓடி ‌வி‌ட்டன‌ர்.

படுகாய‌‌ம் அடை‌ந்த 3 பேரு‌ம் கடலூ‌ர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்