தகுதியுள்ளவர்கள் மட்டும் இலவச டி.வி. வாங்கவேண்டும் : அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா!

வியாழன், 6 மார்ச் 2008 (16:12 IST)
''தமிழக அரசின் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டியை முறைகேடாக யாராவது வாங்கி இருந்தால் அதை திரும்ப பெறப்படும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி மொடச்சூர் ஊராட்சியில் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் என்.கே.பி.ராஜா இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டியை வழ‌ங்‌கி பேசுகை‌யி‌ல், பொதுமக்களிடம் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி இல்லாதவர்களுக்கு வழங்கவே தமிழக அரசு இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி உள்ளவர்களுக்கு இலவச தொலை‌க்காட‌்‌சி பெ‌ட்டி தரப்பட்டுள்ளதா? என கணக்கெடுப்பு நடத்தப்படும். முறைகேடாக தொலை‌‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி பெற்று இருந்தால் அவை திரும்ப பெறப்படும். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் தகுதியுள்ளவர்கள் மட்டுமே இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி பெறவேண்டும் எ‌ன்று அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்