மீனவர் சுட்டுக்கொலை: ராமே‌ஸ்வரத்தில் பத‌ற்ற‌ம்!

வியாழன், 6 மார்ச் 2008 (10:58 IST)
இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ரி‌ன் கா‌ட்டு ‌‌மிரா‌‌ண்டி‌த்தனமான தா‌க்குதலை க‌ண்டி‌த்து த‌ங்க‌‌ச்‌சிமட‌ம் கடையடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌ந்து வரு‌கிறது. ‌‌மீனவ‌ரை இழ‌ந்த ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் ப‌தற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அ‌ங்கு காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

க‌ச்ச‌த் ‌‌தீவு பகு‌தி‌‌யி‌ல் ம‌ீ‌‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டிணத்தை சேர்ந்த கிறிஸ்டி (30) என்பவ‌ர் நே‌ற்று இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் சு‌ட்ட‌ப்ப‌ட்டா‌ர். உயிருக்கு போராடிய அவ‌ரை ராமேசுவரம் மரு‌த்துவமனை‌க்கு கொண்டு வ‌ந்தன‌ர். ஆனா‌‌ல் அவ‌ர் வரும் வழியில் இறந்தார். இதனால் ராமேசுவரத்தில் பத‌ற்றமான சூழ்நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இந்த ‌நிக‌ழ்வு அடங்குவதற்குள் ராமேசுவரத்தில் இருந்து சென்ற மற்றொரு விசைப்படகு மீதும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இ‌தி‌ல் பிரான்சிஸ் என்ற மீனவர் முதுகில் கு‌ண்டு பாய்ந்தது. உடனே அவரை அதே படகில் சென்ற ராஜன், செல்வம், சபேஷ் ஆகியோர் அவரை கரை‌க்கு கொ‌ண்டு வ‌ந்தன‌ர். அ‌ங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மரு‌த்துவமனை‌க்கு கொண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

ராமேசுவரம் மீனவர்கள் மீது அடுத்தடுத்து நடந்த இந்த கொடூர தாக்குதலால் நிலை குலைந்த மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ரி‌ன் கா‌ட்டு‌மிரா‌ண்டி‌த்தன‌த்தை கண்டித்து தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர்கள் வர்த்தக சங்கத்தினர் ஆதரவுடன் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அங்கு பத‌ற்றமான சூழ்நிலை நீடிப்பதால் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பலியான கிறிஸ்டிக்கு தர்மசீலி (27) என்ற மனைவியும், ஸ்டீவ்வாக் (9), ஸ்டெடி வாக் (5) என்ற மகன்களும், ஸ்டெனி (7) என்ற மகளும் உள்ளனர். கிறிஸ்டியின் உடல் இன்று காலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தங்கச்சிமடம் சூசையப்பர் கோ‌யி‌ல் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்