சென்னையை மேம்படுத்த 2-வது பிரமாண்ட திட்டம் தயார்!

புதன், 5 மார்ச் 2008 (19:32 IST)
சென்னையமேம்படுத்துமகூறுகளஆராய்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) 2-வது பிரமாண்திட்டத்ததயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தில், 2026-ம் ஆண்டு வரையில் சென்னை, புறநகர் பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திலசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புதிய சாலை அமைக்க உரிதீர்வகாணப்பட்டுள்ளது. சாலையை மேம்படுத்துவதற்கான விரிவாக்க பணிகளுக்கு இடங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதுள்ள தொடர் பேருந்துகளபோன்று நீளமான பேருந்துகளஇயக்கி மக்கள் நெரிசலை குறைக்க மாற்று போக்குவரத்து திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் செயலாக்கம் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சென்னையை சுற்றியுள்புறநகர் பகுதிகளில் பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்படுத்தவும், 4 மாடி வீடு கட்ட பஞ்சாயத்துகளுக்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி நிதி பெற ஆணையம் அமைக்க வேண்டும். சென்னையில் மக்கள் பெருக்கத்தை குறைக்க மறைமலைநகர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் பகுதிகளில் துணை நகரம் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களநெடுஞ்சாலை, மாநகராட்சி, மின்சாரத்துறை மூலம் செயல்படுத்த தேவையான ஆலோசனை, நெறி முறைகளுமஅதிலகொடுக்கப்பட்டுள்ளன.

இந்திட்டத்தினமீதாஇறுதி ஆய்வு தற்போது நடந்து வருமநிலையில், வருகின்ற தமிழஅரசினநிதிநிலஅறிக்ககூட்டத்தொடருக்கு முன்பஇதற்கு அரசு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்