சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு!
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (15:32 IST)
சென்னையில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22 லட்சத்து 74 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி மாவட்ட வருவாய் அதிகாரி (தேர்தல்) லதா ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
14 தொகுதிகளிலும் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22 லட்சத்து 74 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சட்டமன்ற தொகுதி வாரியாக விவரம் வருமாறு:
ராயபுரம் -1,13,292, துறைமுகம் -82,286, ஆர்.கே.நகர் -1,95,929, பூங்காநகர் -1,00,440, பெரம்பூர் -2,27,301, புரசைவாக்கம் -2,37,742, எழும்பூர் -1,04,730, அண்ணாநகர் -2,86,927, தி.நகர் -1,99,395, ஆயிரம்விளக்கு -1,41,574, சேப்பாக்கம் -87,145, திருவல்லிக்கேணி-1,09,084, மயிலாப்பூர் -1,93,540, சைதாப்பேட்டை -2,01,324.
வாக்காளர்கள் அந்தந்த மண்டலங்களில் சென்று தங்கள் பெயரை சரி பார்த்துக்கொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.