மாணவியரை செ‌ல்பே‌சி‌யி‌ல் படம் பிடித்த வாலிப‌ர்கள் கைது!

வியாழன், 28 பிப்ரவரி 2008 (16:16 IST)
நாமக்கல்லில் கல்லூரி மாணவியரை செ‌ல்பே‌சி‌யி‌ல் படம் எடுத்து மிரட்டிய வாலிபர் இருவரை பிடித்து நாமக்கல் காவ‌ல்துறை‌யி‌ட‌ம் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மோகனூர் சாலையில் அய்யப்பன் கோயில் பேருந்து நிறுத்தம் உ‌ள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் பேருந்தில் செல்வது வழக்கம். மாணவிகள் கூட்டமாக நிற்பதால் இப்பகுதியில் நாள்தோறும் வாலிபர்களும் கூட்டமாகவே நிற்பார்கள். சிலர் அந்த பகுதியில் மோட்டார் பைக்கில் சுற்றி வருவதையும் காணமுடியும்.

அப்பகுதியில் யாரும் கண்டிக்காததால் துளிர் விட்ட அந்த வாலிபர்கள் இரு ச‌க்கர வாகன‌ங்க‌ளி‌ல் மாணவிக‌ள் முன் நிறுத்தி தாங்கள் வைத்திருந்த கேமிரா செ‌ல்பே‌சி‌யி‌லபடம் எடுக்க துவங்கினர்.

விதவிதமான கோணத்தில் படம் எடுத்த அந்த வாலிபர்கள், கேமராவில் ஆபாசமாக இருந்த மாணவியரிடம் பேச்சு கொடுத்து படத்தை காட்டி மிரட்டினர். அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிக‌ள் வாலிபர்களின் மிரட்டல் குறித்து பெற்றோரிடம் புகார் செய்தனர்.

இதனால் பெற்றோர்கள் அந்த வாலிபர்களை கண்காணிக்க துவங்கினர். நேற்று ஒன்று சேர்ந்து பேருந்து நிறுத்தம் அருகே மறைந்து நின்றனர். வழக்கம் போல் மாணவிகளை செ‌ல்பே‌சி‌யி‌லபடம் எடுக்க வரும் இரண்டு வாலிபர்கள் நேற்று தங்கள் வித்தையை காட்ட துவங்கினர்.

இரு ச‌க்கர வாகன‌‌த்தை மாணவியர் முன் நிறுத்தி விட்டு, செ‌ல்பே‌சி‌யி‌ல் படம் ‌பிடி‌த்தன‌ர். அப்போது மறைந்து நின்ற பெற்றோர் படம் ‌பிடி‌த்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவ‌ர்களை மாண‌விக‌‌ளி‌ன் பெ‌ற்றோ‌ர்க‌ள் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

அவ‌ர்க‌ளிட‌ம் காவலர்கள் நடத்திய விசாரணையில், உத்தமபாளையத்தை சேர்ந்த கந்தசாமி (24), வடுகப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (32) என்பது தெரியவந்தது.அவர்கள் பயன்படுத்திய இருச‌க்கர வாகன‌ம், செ‌ல்பே‌சி பறிமுதல் செய்யப்பட்டது.

செ‌ல்பே‌சி‌யி‌லஇரு‌ந்த மாண‌விக‌ள் படமும் அழிக்கப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், ஈவ்டீசிங் சட்டத்தின் கீழ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்