இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர் நல‌ன் கா‌க்க நடவடி‌க்கை : இல.கணேசன் வ‌லியுறு‌த்த‌ல்!

வியாழன், 28 பிப்ரவரி 2008 (12:52 IST)
''இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ' என்று பா.ஜ.க. மா‌நில‌த் தலைவ‌ர் இல.கணேசன் கூறியு‌ள்ளா‌ர்.

த‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணேச‌‌ன், செ‌ய்‌‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ரயில்வே பட்ஜெட் தேர்தலுக்காகவே தயாரிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆராய்ந்து பார்த்தால் உண்மை நிலைமை தெரியும். தமிழகத்திற்கு 9 ரயில்கள் அறிவித்து இருக்கிறார்கள். அவற்றில் 4 ரயில்கள் செல்லும் இடத்தில் வழித்தடமே இல்லை.

டாஸ்மாக் கடைகளால் பொது மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கோவில்கள், பள்ளிகள் அருகே மதுகடைகள் அமைந்து இருப்பது மாணவர்களை, இளைஞர்களை சீரழிக்கும் செயல். கோவில், பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

க‌ம்யூனிஸ்‌ட் கட்சிகள் போன்று தமிழகத்தில் பா.ம.க.வும் மக்களை ஏமாற்றி வருகிறது. தி.மு.க. தலைவர்களுடன் உள்ளே சிரித்து பேசுகிறார். வெளியே வந்ததும் பாய்கிறார், போராட்டம் அறிவிக்கிறார். ஏன் இந்த தடுமாற்றம். இந்த நிகழ்வுகளால் பா.ம.க. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசிய தமிழர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்று முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வுடன் நல்ல நட்பு நீடிக்கிறது. கூட்டணி பற்றி மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவை அறிவிப்பார்கள் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்