எழுத்தாளர் சுஜாதா மறைவு!

வியாழன், 28 பிப்ரவரி 2008 (10:33 IST)
இருதநோயா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் உ‌ள்அ‌ல்ப‌ல்லேமரு‌த்துவமனை‌யி‌லமரணம் அடைந்தார்.

சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் எழுத்தாளர் சுஜாதா. 73 வயதாஇவ‌ர், இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தா‌ர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நிலைக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மரு‌த்துவமனை‌யி‌லஅனுமதிக்கப்பட்டார். அங்கு ‌சி‌கி‌ச்சபல‌னி‌ற்‌சி நேற்றிரவு 10.30 ம‌ணி‌க்சுஜாதமரணம் அடைந்தார். அப்போது அருகில் அவரது மனைவி இருந்தார்.

சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ மரு‌த்துவனமை‌யி‌லவைக்கப்பட்டு இருக்கும்.

சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார். சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்