சென்னை சென்ட்ரலில் இரயில் பெட்டி தடம் புரண்ட விபத்து: காலை இரயில்கள் ரத்து!
திங்கள், 25 பிப்ரவரி 2008 (13:29 IST)
ஜெய்ப்பூர் விரைவு ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டதால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்படுவதாக இருந்த இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நேற்று மாலை ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் இரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் எக்ஸ்பிரஸ், புறநகர் இரயில்களின் போக்குவரத்து 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து , திருப்பூர்-சென்னை ஏலகிரி விரைவு வண்டி, பெங்களூர் சதாப்தி விரைவு வண்டி (காலை 11 மணி), திருப்பதி- சென்னை இரயில் (மதியம் 13.30) ஆகிய இரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சில இரயில்கள் எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவஜீவன் விரைவு வண்டி (காலை 10.30 மணி), வெஸ்ட் கோஸ்ட் விரைவு வண்டி (12.15 மணி), மும்பை விரைவு வண்டி (12.30 மணி) ஆகிய இரயில்கள் எழும்பூரிலிருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044- 25357393, 64502415, 25024538, 25024545 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.