தொடக்க கல்விக்கு தனி அமைச்சர்: ராமதாஸ்!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (09:42 IST)
''தொடக்க கல்விக்கு தனியாக அமைச்சர், இயக்குனர் வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ரராமதாஸ் கூறினார்.

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பள்ளி சீரமைப்பு மாநாடு செங்கல்பட்டில் உள்ள தூய கொலம்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகை‌யி‌‌ல், தற்போது தமிழகத்தில் கல்வி துறைக்கு தங்கம் தென்னரசு சிறப்பாக செயல்படுகிறார்.

தொடக்க கல்விக்கென்று தனியாக ஒரு அமைச்சர், செயலாளர், இயக்குனர் வேண்டும். அப்படி வந்தால் கல்விக்கு 3 அமைச்சர்கள் கிடைப்பார்கள். ஆரம்ப கல்வி மிக மிக முக்கியம். நாட்டிக்கு தேவை ஆரம்ப கல்வி கட்டாயம் தேவை என்று பொருளாதார வல்லூனர் அமர்த்தியாசென் கூறினார். அதே கருத்தை தான் நாங்களும் கூறி வருகிறோம். கல்வி என்பது சுகமான சுமையில்லாத கல்வியாக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது 20 கிலோ, 30 கிலோ புத்தக மூட்டைகளை சுமந்து கொண்டு பள்ளிக்கு சுமையான கல்வி படிக்க செல்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் என்று இருக்கக் கூடாது. தரமான கல்வி பெற 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை வர வேண்டும் எ‌ன்றராமதா‌ஸகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்