க‌ட்டு‌த்தொகையை இழ‌‌ந்த நடிக‌ர் க‌ட்‌சிக‌ள்: கருணா‌நி‌தி சாட‌ல்!

சனி, 23 பிப்ரவரி 2008 (13:00 IST)
இடை‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட நடிக‌ர்க‌ளி‌ன் க‌ட்‌சிக‌ள் க‌ட்டு‌த்தொகையை‌‌‌க் கூட‌ப் பெறமுடி‌ய‌வி‌ல்லை எ‌ன்று த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி க‌விதை வடி‌வி‌ல் சாடியு‌ள்ளா‌ர்.

முத‌ல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை வருமாறு:-

ஆர்ப்பாட்டமென்ன, போர்ப்பாட்டு என்ன ,

"சார்பட்டா'' பரம்பரை யென்ற சவுக்கடிப்பேச்சுத் தான் என்ன,என்ன?

வேர்பட்டுப் பிளக்கின்ற பூமியிலே மழை

நீர்பட்டு முளைக்கின்ற காளான் போலே

ஒரு கட்சி உதிக்கும், மறு கட்சி பிறப்பதற்குள்!

இருகட்சி இருள் போக்குமென்று இங்குள்ள ஏடெல்லாம்

திருவிழா தினந்தோறும் நடத்திப்பார்த்து, ஏமாந்த காரணத்தால்,

இருவிழி மூடிக்கொண்ட குருடுகளாய் ஆகிவிட்டார்!

நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்

உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்ததம்மா!

நடிகர் இருவர் ஆட்சியிலே: நாடுவரபபோகின்றதென்று !

நடுநிலை ஏடுகள் கூட நம்மீது கெடுமதி கொண்டு சீறி

நன்மையெது தீமையெது என்பதறியாது அறவழிகள் மீறி,

உண்மையைப் பொய்யென்றும், பொய்யைப் புனித மென்றும்

வெளியிட்டார் செய்திகளை; அவையணைத்தும்

ஒளிபட்ட இருளைப்போல் ஓடி ஒளிந்ததம்மா!

நூற்றுக்கு ஒரு விழுக்காடு இடம்கூட இவர்தம் பொய்க்

கூற்றுக்குச்செவி சாய்த்து வெற்றியெனக் கிடைக்க வில்லை!

கறுப்புநிற எம்.ஜி.ஆர். என்றும், கர்மவீரர் தொண்டர் என்றும் கர்ச்சித்தோர்

கட்டுத்தொகையைக்கூட இழந்து நிற்கும் பரிதாபத்தை என்ன சொல்ல?

எறும்புத்தலைகளை இமயமலைகளாய் வர்ணித்த இதழாளர்களே:

கரும்பினும் இனிய செய்தியாய் கழகக் கூட்டணியன்றோ பெருவெற்றி ஈட்டியது இன்று!

அன்பு உடன்பிறப்புக்காள், அதற்குள் துள்ளிக்குதிக்காமல்-

அடுத்து வரும் வெற்றிகட்கு இது அச்சாரமென அயராது உழைத்திடுக!

இ‌வ்வாறு அவ‌ர் அ‌தி‌ல் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்