விவசாய‌க் கடன்களை ம‌த்‌திய அரசு ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி!

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (16:35 IST)
''இ‌ந்‌திஅள‌வி‌ல் ‌விவசாய‌க் கட‌ன்களம‌த்‌திஅரசர‌த்தசெ‌ய்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கோ‌‌‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தமுதலமைச்சர் கருணாநிதி இ‌ன்றவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழகத்திலே 2006ஆம் ஆண்டு, மே திங்களில் அரசு பொறுப்பேற்றவுட‌னநான் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று தான் - 7000 கோடி ரூபாய்க்கான விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததாகும். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில அரசு இத்தனை கோடி ரூபாய் அளவிற்கு அதுவும் விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்த வரலாறு இதுவரை கிடையாது. அந்த வரலாற்றை முதன் முதலாக கொண்டு வந்த பெருமை நம்முடைய தமிழக அரசுக்கே உரியதாகும்.

நம்மை முன்னுதாரணமாகக் காட்டித் தான் மற்ற மாநிலங்களிலும், இந்திய அளவிலும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து அதன் தொடர்ச்சியாகத் தான் சோனியா காந்தியநேற்றையதினம் விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை வெளி வரவிருக்கின்ற இந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் சேர்ந்து அவர்களின் கோரிக்கையை நானும் பரிந்துரை செய்திடுகின்றேன்; ஜனநாயகத்தை மதித்துப் போற்றும் மாண்புடைய சோ‌னியகா‌ந்‌தி உழவர் வேண்டுகோளை உரிய நேரத்தில் ஏற்பார் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும்! இந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு முன் வை‌க்‌கிறே‌னஎ‌ன்றமுத‌லமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்