தமிழக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி: டி.ஆர்.பாலு
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (11:01 IST)
தமிழக தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் சிறிய பாலங்களை சீரமைக்கவும் ரூ.5.3 கோடியை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அனுமதி அளித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை எண்.208-ல் புதுப்பட்டி- திருமங்கலம் சாலைக்கு இடையேயான பகுதியை வலுப்படுத்தும் பணிக்கு ரூ.2.7 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களை இணைக்கும் இந்த முக்கிய தேசிய நெடுஞ்சாலை தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல முக்கிய நகரங்கள் வழியாக அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண்.208-ல் ஐந்து சிறிய பாலங்களை சீரமைப்பதற்காக ரூ.2.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்களின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை அளவுகோலுக்கு ஏற்ப இந்த பாலங்களை சீரமைக்க அமைச்சர் டி.ஆர்.பாலு அனுமதி அளித்துள்ளார்.