இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்ப அட்டைதாரர்கள் பலர் சமையல் எரிவாயு இணைப்புகளையும் பெற்றுள்ளதோடு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் மூலம் தொடர்ந்து மண்எண்ணை பெற்று வருவதாக தெரிய வருகிறது.
எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்குரிய அடுத்த மாற்று சிலிண்டர்களுக்கு பதிவு செய்யும்போது குடும்ப அட்டைகளை எரிவாயு விநியோகஸ்தர்களிடம் கொண்டு சென்று எரிவாயு இணைப்பு விவரங்களை குடும்ப அட்டையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
குடும்ப அட்டை இல்லாதவர்கள் "குடும்ப அட்டை இல்லை'' என்பதற்கான சான்றினை சம்பந்ததப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையாளரிடம் பெற்று அல்லது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து அதற்கான ஒப்புதல் சீட்டை பெற்று எரிவாயு விநியோகஸ்தரிடம் காண்பித்து தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.