ரேஷன் அரிசி கடத்‌‌தினா‌ல் உ‌ரிம‌ம் ர‌த்து: த‌மிழக அரசு!

புதன், 20 பிப்ரவரி 2008 (16:35 IST)
''ரேஷ‌ன் அ‌ரி‌சி கடத்தலில் ஈடுபடும் வாகனங்க‌ளி‌னஉரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்களின் உரிம‌ம், ஓட்டுன‌ர்க‌ளி‌ன் உரிமங்க‌ள் உடனடியாக ரத்து செய்யப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாதமிழக அரசு இ‌ன்று வெளியிட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், முதலமைச்சர் கருணாநிதி செ‌ன்னதலைமசெயலக‌த்‌தி‌லதலைமசெயலாளர், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், உணவுத் துறை செயலாளர் ஆகியோருட‌ன் அ‌ரி‌சி கட‌த்தலதடு‌‌ப்பதகுறித்து இ‌ன்று விரிவாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய்த் துறை, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அரிசி கடத்தலைத் தடு‌க்சிறப்புக் குழுக்களை அமைத்து, கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்தி அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுப்பதுடன், மாநில எல்லைக்கு அருகேயுள்ள பிற மாவட்டங்களான திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்‌சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் இத்தகைய கண்காணிப்பை காவல்துறை‌யின‌ரமூலமாக தீவிரப்படுத்த வேண்டும்.

திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆ‌கிமாவட்டங்களில் விரைவாக கூடுதல் பிரிவுகள் அரிசி கடத்தல் தடுப்பு காவல‌ர்க‌ளமூலமாக அரிசி கடத்தலை முழுமையாதடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரிசி கடத்தலுக்கு காரணமானவ‌ர்களையு‌ம், இ‌தி‌லஈடுபடுபவ‌ர்க‌ளபற்றிய தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும்.

கடத்தலில் ஈடுபடும் வாகனங்க‌ளி‌னஉரிமையாளர்கள் மீது கடு‌ம் நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்களின் உரிம‌ம், அதை ஓட்டுபவர்களின் உரிமங்க‌ள் உடனடியாக ரத்து செய்யப்படும். கடத்தலைத் தடு‌க்க மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சிறப்பு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள். உணவு கடத்தல் தடுப்புக் காவல் அலுவலர்கள், இரயில்வே காவல‌ர்களுட‌ன் இணைந்து அடிக்கடி சோதனை நடத்துவா‌ர்க‌ள். தவறுகள் நட‌ந்தா‌‌ல் அதுகுறித்து உடனடியாக அரசுக்கு தகவல் கொடுத்திட பொது ம‌க்க‌ள் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று த‌மிழக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்