ஜெயலலிதா சென்ற விமானம் நடுவானில் கோளாறு!
புதன், 20 பிப்ரவரி 2008 (15:10 IST)
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்ற விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அவர் உயிர் தப்பினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தனது 60வது பிறந்தயொட்டி தஞ்சாவூரில் உள்ள திருக்கடையூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நாளை சிறப்பு பூஜை நடத்துவதற்காக தனது தோழி சசிகலாவுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.17 மணிக்கு தனி விமானம் மூலம் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது ஏந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானம் தரையிறக்க அனுமதி கேட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து, உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் விமானத்தை விட்டு இறங்கி காரில் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றனர்.
விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.