பெட்ரோல் விலை உயர்வை க‌ண்டி‌த்து 20ஆ‌ம் தே‌தி விடுதலை சிறுத்தைகள் போராட்டம்!

சனி, 16 பிப்ரவரி 2008 (16:24 IST)
ப‌ெ‌ட்ரோ‌ல், டீ‌ச‌ல் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்து ‌பி‌ப்ரவ‌ரி 20ஆ‌ம் தே‌தி ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் சா‌ர்‌பி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், காங்கிரஸ் தலைமையில் ஆன கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது.

இந்த விலை உயர்வால் உழைக்கும் அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அறிந்தும் இதனை தவிர்ப்பதற்குரிய வழியை தேடாமல் இந்த முடிவை எடுத்திருப்பது இந்திய அரசின் பொருளாதார கொள்கை மிகவும் பலவீனமாக உள்ளதை வெளிப்படுத்துகிறது.

இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ‌பி‌ப்ரவ‌ரி 20ஆ‌ம் தே‌தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலைச்சிறுத்தை களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் எனது தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடைபெறும் எ‌ன்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்