வழக்கறிஞர்கள் நல நிதியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18 ஆம் தேதி நீதிமன்றங்களைப் புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது!
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் இன்று அதன் தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வழக்கறிஞர்கள் நல நிதியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவது, காவல்துறை அதிகாரிகள் மூத்த நீதித்துறை அலுவலர்கள் ஆகியோரிடமிருந்து வழக்கறிஞர்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18 ஆம் தேதி நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பால் கனகராஜ், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தார்.