சேது ‌தி‌ட்ட‌த்தை கை‌விட‌க்கோ‌ரி ஜனா‌திப‌தி‌யிட‌ம் மனு!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (13:34 IST)
''ராமர் பாலத்தை இடிக்காமல் வேறு வழியாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றால் அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்'' என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன் சுவா‌‌மி நே‌ற்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை ச‌ந்‌தி‌த்து மனு கொடு‌த்தா‌ர். அ‌தி‌ல், சேது சமுத்திரத் திட்டத்துக்காக மத்திய அரசு மேலும் பணத்தை செலவழிக்கக் கூடாது. ராமர் பாலத்தை இடிக்காமல் வேறு வழியாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றால் அந்த திட்டத்தையே கை‌விடுமாறு மத்திய அரசை வலியுறுத்துங்கள்.

இதற்கு பதிலாக தூத்துக்குடியில் இருந்து கொ‌ல்க‌ட்டா வரை கிழக்குக் கடலோரத்தில் அகல இரயில் பாதையை அமைக்குமாறு இரயில்வே துறைக்கு உத்தரவிடலாம். தூத்துக்குடியில் சரக்குப் பெட்டகம் (கன்டெய்னர்) கையாளும் துறைமுகத்தை அமைக்கலாம் என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்