ம‌த்‌‌திய ப‌ட்ஜெ‌ட்டி‌ல் த‌மிழக நல‌ம் கா‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ள்: எம்.கிருஷ்ணசாமி!

புதன், 13 பிப்ரவரி 2008 (09:53 IST)
மத்திய அரசின் பொது மற்றும் இரயில்வே பட்ஜெட்களிலும் தமிழக நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையி‌ல், தமிழக வளர்ச்சித்திட்டங்களுக்காக 2008-2009-ம் ஆண்டில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த ஆண்டில் ரூ.14 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்ட தமிழக வளர்ச்சிக்கான திட்ட ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடியாக மத்திய அரசு உயர்த்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டுள்ள முக்கியத்திட்டங்களுக்கும், மத்திய திட்டக்குழு ஆதரவளிக்கும் என மத்திய திட்டக்குழு தலைவர் உறுதியளித்துள்ளார் என்ற செய்தியையும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழக வளர்ச்சியில் மத்திய அரசுக்கு உள்ள அக்கறையையும், ஆர்வத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

அதோடு மத்திய அரசின் பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்களிலும் தமிழக நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்