சென்னை ராமாவரத்தில் நடிகர் நெப்போலியனின் ஜீவன் டெக்னாலஜிஸ் சாப்ட்வேர் தொழில் நிறுவனத்தை இன்று தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், ஒரு பெரிய நிறுவனத்தை நடிகர் நெப்போலின் தொடங்கி இருக்கிறார். 500 கிளைகள் கொண்ட இந்த மென்பொருள் தொழில் நிறுவனத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த ஓராண்டு காலத்தில் மென் பொருள் ஏற்றுமதி 17 விழுக்காட்டில் இருந்து 47 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. மென்பொருள் தொடர்புடைய தொழில்கள் இந்த ஒரு ஆண்டு காலத்தில் 20 தொடங்கப்பட்டுள்ளது. 16 தொழில்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விரைவில் 5 தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் மேலும் 20 லட்சம் பேருக்கு இந்த துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.