''சேது சமுத்திர திட்டத்தை தடை செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் சூழ்ச்சி செய்து வருகின்றன'' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பிர்லா கோளரங்கம்-அறிவியல் நகரத்தில் சென்னை அறிவியல் விழா-2008 மற்றும் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசும்போது அவர் கூறியதாவது:
அறிவியல் ரீதியான அணுகுமுறைகளை இளம் உள்ளங்களில் உருவாக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்துக்கு ராமர் பாலம் பிரச்சினை மூலம் அரசியல் ரீதியாகவும், மத உணர்வுகளைத் தூண்டியும் தடை செய்ய முயற்சி நடக்கிறது.
அறிவியல் வளர்ச்சிக்கு இதுபோன்ற கருத்துகள் தடையாக உள்ளதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வருங்கால சமுதாயம் வளர்ச்சி பெறும். எனவே, பள்ளிக் கல்வியுடன் மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.