இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
முதற்கட்டமாக முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா பிறந்த நாளாகிய 15.9.2006 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் கரசங்கால் கிராமத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 9 கோடி ரூபாய் செலவில் 30,000 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக 685 கோடி ரூபாய் செலவில் 25 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டத்தை 15.2.2007 அன்று திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் அவர் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக 750 கோடி ரூபாய் செலவில் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ள 34 லட்சத்து 25 ஆயிரம் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரு பகுதியாக 10 லட்சத்து 53 ஆயிரம் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் பணிகளை, முதலமைச்சர் கருணாநிதி 16ம் தேதி வேலூரில் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் 5 லட்சத்து 83 ஆயிரம் எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் பணிகளையும் முதலமைச்சர் கருணாநிதி வைக்கிறார்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் 17ம் தேதி நடைபெறும் விழாக்களில் அமைச்சர்கள் கலந்து கொண்டு வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்குகிறார்கள்.