சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்தை தாமத‌ப்படு‌த்துவது யா‌ர்? இல.கணேசன் கே‌ள்‌வி!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (11:07 IST)
''சேது சமுத்திர திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். தாமதப்படுத்துவது யார்? என்பதை அறியவேண்டும்'' எ‌ன்று பார‌திய ஜனதா க‌ட்‌சி‌‌‌யி‌ன் மா‌நில‌த் தலைவ‌ர் இல.கணேச‌ன் கே‌ட்டு‌‌ள்ளா‌ர்.

ஈரோ‌ட்டி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றிய இல.கணேச‌ன், இ‌ந்‌தியா முழுவது‌ம் யா‌த்‌‌திரை செ‌ல்ல‌ பார‌திய ஜனதா தலைவர் அத்வானி முடிவு செ‌ய்‌திரு‌ந்தா‌ர். அதன்படி மார்ச் 9ஆ‌ம் தேதி அவர் சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அவரது நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. கோவை‌யி‌ல் பயங்கரவாதத்துக்கு பலியானவர்கள் நினைவாக ‌பி‌‌ப்ரவ‌ரி 14ஆ‌ம் தேதி அஞ்சலி செலுத்தும் நாள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்தால் மத்தியில் ஆளும் கட்சிகளின் கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க தனித்து விடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும்வரை இந்த திட்டத்தை தள்ளிப்போட மத்திய அரசு ஏதாவது செய்யும் என்று தெரிகிறது.

சேது சமுத்திர திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். தாமதப்படுத்துவது யார்? என்பதை அறியவேண்டும். ராமர்பாலம் தகர்க்கப்படமாட்டாது. பாதுகாக்கப்படும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்