அரசு பேரு‌ந்து ஊழியர்களுக்கு 12 ‌விழு‌க்காடு சம்பள உயர்வு!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (10:24 IST)
அரசு பேரு‌ந்ததொழிலாளர்களுக்கு 12 ‌விழு‌க்காடசம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,100 வரை கூடுதலாக கிடைக்கும்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் நேரு, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

28 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடந்தது. அதன்பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அமைச்சர் கே.என்.நேரு கூ‌றுகை‌யி‌ல், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரத்து 124 வரை சம்பள உயர்வு கிடைக்கும். அடிப்படை ஊதியத்தில் 12 ‌விழு‌க்காடஉயர்த்தப்படுகிறது. இதனால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

அரசுக்கு ஆண்டுக்கு ரூ.195 கோடி கூடுதல் செலவாகும். மேலும், இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ள வகையில் அரசுக்கு கூடுதலாக ரூ.11 கோடி செலவினம் அதிகரிக்கும். இனி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடக்கும் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்