இது தொடர்பாக அவ்வமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கருத்துரிமையை பறிக்கும் விதத்தில் வதந்திகள் பரப்புவதை காங்கிரசார் நிறுத்தி கொள்ள வேண்டும்.
கருத்துரிமைக்கு குரல் கொடுக்கும் தொல்.திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றால் விடுதலைப் புலிகளை ஆதரித்த அ.இ.அ.தி.மு.க.வைத் தடை செய்ய வேண்டும்; அக்கட்சி தலைவரை கைது செய்ய வேண்டும்.
ஒரு சமூகத்தின் கருத்துக்களை வெளிவர விடாமல் தடுப்பதும் ஒரு வகையான வன்கொடுமையே. ஆகையால் கருத்துரிமையை தடுக்கும் சக்திகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
தமிழர்களின் கருத்துரிமையை பறிக்கும் நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.