இல‌ங்கை ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ‌பி‌ன் வா‌ங்க மா‌ட்டோ‌ம்: ‌திருமாவளவ‌ன்!

செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:09 IST)
''இலங்கை பிரச்சினை தொடர்பான எங்களது கருத்தில் முரண்பாடு எதுவு‌மகிடையாது. எங்களது கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம்'' எ‌ன்று ‌விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்‌.

கடலூ‌ரி‌ல் நடைபெ‌ற்ற பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் கலந்து கொண்டு ‌திருமாவளவ‌ன் பேசியதாவது:

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினரை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள காவல் துறையினர் பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். மாற்று கட்சியினரும் நம்மை இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். அம்பேத்கர் பெயரை சொல்லி இயக்கம் அமைத்துள்ளவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை தடுக்கும் வழிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து கட்சியை காப்பாற்ற நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

பொங்கலுக்கு முன்பாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிட விரும்பினேன். ஆனால் அது முடியவில்லை. விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். அதுவரையிலும் இயக்க தோழர்கள் அமைதி காக்க வேண்டும். இடையிடையே நம்மிடையே திணிக்கப்படும் போராட்டங்களால் தான் நிர்வாகிகள் நியமனம் தாமதமாகிறது.

சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மாநாடு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எத்தனை அடக்கு முறைகள் நம்மீது திணிக்கப்பட்டாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இலங்கை பிரச்சினை தொடர்பான எங்களது கருத்தில் முரண்பாடு கிடையாது. எங்களது கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம். போராட்டம் என்று வந்தால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். கொள்கை வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

இ‌வ்வாறு ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்