‌பிள‌ஸ் 2 செ‌ய்‌முறை தே‌ர்வு: 3 ல‌ட்ச‌ம் மாணவ‌ர்க‌ள் எழுது‌கிறா‌ர்க‌ள்!

செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:16 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல் ‌நே‌ற்று துவ‌ங்‌கிய பிள‌ஸ் 2 செ‌ய்துறை தே‌ர்வை 3 ல‌‌ட்ச‌ம் மாணவ- மாண‌விக‌ள் எழு‌து‌கி‌ன்றா‌ர்க‌ள்.

த‌மி‌‌ழ்நாடு, புது‌ச்சே‌ரி‌யி‌‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 3‌ஆ‌‌ம் தே‌தி ‌‌பிள‌‌‌ஸ் 2 தே‌ர்வு துவ‌ங்கு‌கிறது. இ‌ந்த தேர்வு‌க்கு மு‌ன்னதாக செ‌ய்முறை தே‌ர்வுகளை நட‌த்த‌ி முடி‌ப்பது வழ‌‌க்க‌ம். அதுபோல ‌பிப்ரவ‌ரி மாத‌ம் 6ஆ‌‌ம் தே‌தி முத‌ல் 16ஆ‌‌ம் தே‌தி வரை நட‌த்‌தி முடி‌க்க தே‌ர்வு‌த்துறை உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. ஆனா‌ல் அ‌ந்த‌ந்த மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌ள்‌‌ளிக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌க்கு ஏ‌ற்ப முத‌ன்மை க‌ல்வ‌ி அ‌திகா‌ரி உ‌த்தர‌வி‌ன்படி செ‌ய்முறை தே‌ர்வு நட‌த்த‌ப்படு‌கிறது. 6ஆ‌ம் தே‌தி‌க்கு 2 நா‌ட்களு‌க்கு மு‌ன்னதாக நட‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.

செ‌ன்னை‌யி‌ல் 2 க‌ட்டமாக செ‌ய்முறை தே‌ர்வு நட‌க்‌கிறது. முத‌ல் க‌ட்ட ‌பிள‌ஸ் 2 செ‌ய்முறை தே‌ர்வு நே‌ற்று துவ‌ங்‌கியது. அ‌தி‌ல் 141 தே‌ர்வு மைய‌ங்க‌ளி‌ல் 21 ஆ‌யிர‌த்து 874 மாணவ- மாண‌விக‌ள் செ‌ய்முறை தே‌ர்வை எழு‌தின‌ர். இவ‌ர்களு‌க்கு 9ஆ‌ம் தே‌தி வரை தே‌ர்வு நட‌க்‌கிறது.

2ஆ‌ம் க‌ட்ட தே‌ர்வு 137 ப‌ள்‌‌ளிக‌ளி‌ல் 11ஆ‌ம் தே‌தி முதல் 16ஆ‌‌ம் தே‌தி வரை நட‌க்‌கிறது. இ‌தி‌ல் 20 ஆ‌யிரத‌்து 161 மாணவ- மாண‌விக‌ள் செ‌ய்முறை தே‌ர்வை எழுது‌கிறா‌ர்க‌ள். த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் 3 ல‌ட்ச‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ- மாண‌விக‌ள் இ‌ந்த செ‌ய்முறை தே‌ர்வை எழுதுகிறா‌ர்க‌ள்.

பிள‌ஸ் 2 செ‌ய்முறை தே‌ர்வு முடி‌ந்த ‌பிறகு மெ‌ட்‌ரி‌க்குலேச‌ன் செ‌ய்முறை தே‌ர்வு நட‌த்த‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்